1st International BREASTFEEDING CONFERENCE @ CHENNAI

BREASTFEEDING
スポンサーリンク

TNA NEWS

சர்வதேச தாய்பால் விழிப்புணர்வுக் குறித்த ஒருநாள் கருத்தரங்கு சென்னையில் உள்ள தனியார் விடுதியில் நடைப்பெற்றது.

சென்னையில் உள்ள தனியார் விடுதியில் சர்வதேச தாய்பால் விழிப்புணர்வுக் குறித்த ஒருநாள் சிறப்பு கருத்தரங்கு நடைப்பெற்றது.

இதில் சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு சுகாதாரத்துறை முதன்மைச் செயலாளர் இராதாகிருஷ்ணன் சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்டு கலந்தாய்வுக் கூட்டத்தினைத் தொடங்கி வைத்தார்.

மேலும் தாய்பால் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் சிறப்பு பாடல் அடங்கிய குறுந்தகட்டினையும் அவர் வெளியிட்டார்.

மேலும் இந்த கலந்தாய்வுக் கூட்டத்தில் இந்தியா மட்டுமல்லாது கனடா உள்ளிட்ட பல்வேறு நாடுகளிலிருந்து மருத்துவ நிபுணர்கள் பலர் கலந்துக் கொண்டு தாய்பால் குறித்த உண்மைகள் குறித்தும், பல்வேறு நடைமுறை சிக்கல்கள் குறித்தும் ஒருவருக்கொருவர் தங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொண்டனர்.

இதில் சிறப்பு விருந்தினர்களாக கனடா நாட்டின் சர்வதேச தாய்பால் மைய இயக்குனர் ஜாக் நியூமேன், மாநில குழந்தைகள் நல மைய இயக்குனர் அரசர் சீராளர் , குழந்தைகள் நலத்துறை இயக்குனர் சண்முக சுந்தரம் உள்ளிட்ட பலர் கலந்துக் கொண்டனர்.
TNA NEWS 28–07–2018 CHENNAI HOTEL SAVERA

スポンサーリンク
スポンサーリンク

BREASTFEEDING
breastmilkをフォローする
母乳動画まとめ~BREASTFEEDING~

コメント

Translate »